தர்மபுரி மாவட்டம் உதய நாள் கொண்டாட்டம்
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60ஆம் ஆண்டு வைரவிழா கொண்டாடுவதை முன்னிட்டு தருமபுரி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்படம் நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இன்று வியாழக்கிழமை மாலை 3 மணி அளவில் பொது மக்களுடன் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டாடினார். உடன் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர் உள்ளிட்ட அலுவலர்கள்,பொது மக்கள் கலந்து கொண்டார்கள்
Next Story



