கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர்  துவக்கினார்

கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை கலெக்டர்  துவக்கினார்
X
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில், காந்தியடிகளின் 157-ஆவது பிறந்தநாளையொட்டி, நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் வணிக வளாகத்தில் அமைந்துள்ள கதர் கிராம அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை, கலெக்டர் அழகு மீனா இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண்ஜெகத் பிரைட், மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா,  அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்
Next Story