கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தை படங்களுடன் விளக்க செந்தில் பாலாஜிக்கு அதிகாரம் இல்லை.முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் பேட்டி.

கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தை படங்களுடன் விளக்க செந்தில் பாலாஜிக்கு அதிகாரம் இல்லை.முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் பேட்டி.
கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தை படங்களுடன் விளக்க செந்தில் பாலாஜிக்கு அதிகாரம் இல்லை.முன்னாள் எம்பி ராமலிங்கம் கரூரில் பேட்டி. பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெரும் கோட்ட பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் இன்று கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரூரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து நேற்று கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி படங்களுடன் விளக்கி கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய அவர்,இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக அரசு ஒரு நபர் ஆணையம் வைத்து விசாரணை நடத்தி வரும் போது அந்த விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை என நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இருந்த போதும் இந்த ஒரு நபர் விசாரணை நடந்து வரும் வேலையில் செய்தியாளர்களிடம் இந்த சம்பவம் குறித்து அரசு துறையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டியும் அதற்கான படங்களை காட்டியும் விளக்கிக் கூற செந்தில் பாலாஜி எம்எல்ஏவுக்கு அதிகாரம் இல்லை.தற்போது அதற்கு அவசியமும் இல்லை. ஒருவேளை அவசியம் என கருதினால் தமிழக முதலமைச்சர் இதற்காக ஒரு அமைச்சரை நியமித்து அவர் மூலமாக இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்க வேண்டும். அல்லது அரசுத்துறை ஐஜி பொறுப்பில் உள்ள அதிகாரிகள் இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒரு முன்னாள் அமைச்சர்.தற்போது அவர் எம்எல்ஏ.ஏற்கனவே மற்றொரு வழக்கில் அவர் சிறையில் இருந்த போது அவரை அமைச்சராக தொடர அனுமதி அளித்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதன் பிறகு நீதிமன்றம் உத்தரவால் அந்த பதவியை இழந்தார். அவருடைய வழக்கில் அடுத்த நகர்வை எதிர்கொண்ட போது மீண்டும் அவருக்கு அதே துறையை ஒதுக்கி அமைச்சராக்கி அழகு பார்த்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அந்த அளவிற்கு செந்தில் பாலாஜி ஸ்டாலின் உறவு வலுவாக உள்ளது. இந்த நிலையில் நாட்டில் இதுவரை நடந்திராத ஒரு சம்பவம் குறித்து அவர் விளக்க வேண்டிய அவசியம் என்ன? இது தொடர்பாக ஸ்டாலின் நியமித்த ஒரு நபர் ஆணையம் எந்த அளவுக்கு நடக்கும் என தெரியாதா!. அதனால் தான் நாங்கள் சிபிஐ விசாரணை வேண்டுமென கேட்கின்றோம். இப்படி அவசரமாக அவர்கள் தங்கள் நிலையை குறித்து விளக்க வேண்டிய சூழல் அவர்களிடையே உள்ள பயத்தை காட்டுகிறது. சம்பவம் நடந்த பிறகு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏற்புடையதாக இருந்தாலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடந்திடக் கூடாது அதற்கு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணாமல் விடக்கூடாது. அந்த அடிப்படையிலேயே நாங்கள் சிபிஐ விசாரணை கோருகிறோம்.ஸ்டாலின் உண்மையாகவே நேர்மையாக நடந்திட வேண்டும் என நினைத்தால் யாருக்கும் சந்தேகம் இல்லாத அளவிற்கு சிபிஐ விசாரணைக்கு அவராகவே உத்தரவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
Next Story