விடியல் ஆரம்பம் சார்பாக காந்தியின் பிறந்த நாள் விழா

விடியல் ஆரம்பம் சார்பாக காந்தியின் பிறந்த நாள் விழா
X
மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது
குமாரபாளையம் உடையார் பேட்டையில்  மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  மகாத்மா காந்தியின்  தியாக  வாழ்க்கை குறித்து, மாணவ , மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் மாணவ மாணவிகள் சமூக ஒற்றுமையை வலியுறுத்தி, பதாதைகள் ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும்  பேரணியாக  சென்றார்கள். இதில்  தீனா, சௌடேஸ்வரி,  ஜமுனா, தினேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சிவகுமார், சுப்ரமணி, சிவராஜ், கோகுல்ராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story