கோலாட்டத்துடன் திருவீதி உலா வந்த  அம்மன் வேடமணிந்த குழந்தைகள்

குமாரபாளையத்தில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் கோலாட்டத்துடன் திருவீதி உலா வந்தனர்.
நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று குமாரபாளையம் அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.  சேலம் சாலை சவும்ண்டம்மன் கோவில் சார்பில் நவகிரக நாயகிகள் போல் குழந்தைகள் அம்மன் வேடமிட்டு அலங்கார ரதத்தில் ஊர்வலமாக வந்தனர். அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தவாறு வந்தார். இவர்களுடன் 100கும் மேற்பட்ட சிறுமியர் கோலாட்டம் ஆடியபடி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த திருவீதி உலா சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலிலிருந்து துவங்கி, தம்மன்னன் வீதி, அக்ரஹாரம், புத்தர் வீதி, சேலம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலில் நிறைவு பெற்றது.வழி நெடுக பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு முன் தண்ணீர் ஊற்றி தூய்மை படுத்தி, காத்திருந்து வேடிக்கை பார்த்ததுடன், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்துடன் வீற்றிருந்த அம்மனை வழிபட்டனர்.
Next Story