தாராபுரம் துர்க்கை அம்மன் கோவிலில் யாக பூஜை அமைச்சர் பங்கேற்பு

X
விஜயதசமியை யொட்டி, தாராபுரத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. இதில், குழந்தை முதன்முதலில் அரிசியில் 'அ' எழுதும் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு அலங்காரம், அன்னதானம் நடைபெற்றது. இதில் சிவியார் மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் தில்லை முத்து முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் துர்க்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில், மாவட்ட தி.மு.க.மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் சசிகலா, அருக்காணி, புனிதா சக்திவேல், மரக்கடை கணேஷ், முத்தரசன் செல்லதுரை, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் அம்சவேணி தக்கார் கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

