காரணம்பேட்டையில் துர்கா பூஜை வழிபாடு

காரணம்பேட்டையில் துர்கா பூஜை வழிபாடு
X
காரணம் பேட்டையில் துர்கா பூஜை வழிபாடு ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் உள்ள கல்குவாரி, மற்றும் தனியார் தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் பணிபுரிகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டு காரணம்பேட்டை கூப்பிடு பிள்ளையார் கோவில் வளாகத்தில் துர்கா பூஜைக்காக செட் அமைத்து களிமண்ணை கொண்டு மகிஷாசுரனை வதம் செய்யும் துர்கா தேவி சிலை மற்றும் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி சிலைகளை செய்து, அதை கடந்த 22-ந் தேதி பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த துர்கா பூஜை விழாவில் கூப்பிடு பிள்ளையார் அறக்கட்டளை தலைவர் சின்னச்சாமி, கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காவீ. பழனிச்சாமி, கல்குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சிவக்குமார், ராமகிருஷ்ணன், ராஜேந்திரன், உள் ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். துர்கா பூஜை வழிபாடு ஏற்பாடுகளை அசிம் குமார் ஓஜா, அகர்வால் விஜயகுமார், பிபின் குரோ, ராம் மனோகர் மற்றும் பலர் செய்திருந்தனர்
Next Story