தர்மபுரியில் முன்னாள் முதல்வர் பிரச்சாரம்

தர்மபுரியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
தர்மபுரிக்கு மக்களை காப்போம் தமிழகத் மீட்போம் என்ற பிரச்சார பயணத்தில் ஒரு பகுதியாக நேற்று வியாழக்கிழமை மாலை தருமபுரி நகர பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கினார். நிகழ்ச்சியில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது பின்பு அதிமுக அரசின் பல்வேறு நல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
Next Story