காந்திஜெயந்தி விழா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் ஆர் மரியாதை

X
காங்கிரஸ் கட்சியினர் பாஜக வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதில், ஒரு கோடி கையெழுத்துக்களைப் பெற இலக்கு நிர்ணயித்து தாராபுரத்தில் 500 பேரிடம் கையெழுத்து பெற்றனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், காங்கிரஸ் கமிட்டி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில், காந்திஜெயந்தியை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில், முன்னாள் தாராபுரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து, நகர தலைவர் குறிஞ்சி செந்தில்குமார், வட்டாரத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில், மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர் தென்னரசு உரையாற்றியபோது, "காந்தியடிகள் எப்போதும் உண்மை மற்றும் அஹிம்சை எனும் உயரிய கொள்கைகளை முன்னிறுத்தினார், அது தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தை உலகம் முழுவதும் தனித்துவமாக்கியது," என்றும், "ஜவஹர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமராக அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியவர், இளைஞர்கள் கனவு காணும் இந்தியாவை உருவாக்க அவர் எடுத்த முயற்சிகள் என்றும் நினைவில் நிற்கும்," என்றும் அவர் எடுத்துரைத்தார். பின்னர், தாராபுரம் பெரிய கடை வீதி பகுதியில் பொதுமக்களிடம் சென்று, வாக்கு வாக்குத்திருட்டிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பல சரக்கு கடைகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பாத்திரக் கடை உரிமையாளர்கள், எலக்ட்ரானிக் கடை வியாபாரிகள், சாலையோர விற்பனையாளர்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட தலைவர் பொதுமக்களிடம் பேசியபோது, "வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும், வாக்கு வாக்குத்திருட்டு என்பது ஜனநாயகத்தை பாதிக்கும் மிகப்பெரிய குற்றம், அதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே இந்த கையெழுத்து இயக்கத்தின் நோக்கம்," எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் பேரியக்கத்தினர் கலந்து கொண்டு, காந்தியடிகளின் வழி காட்டும் பாதையில் நாட்டை முன்னேற்ற உறுதி மொழி எடுத்தனர். இதற்கு முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 49. ஆவது நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
Next Story

