சங்கரன்கோவிலில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் கைது

X
சங்கரன்கோவிலில் செயின் பறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் மீது 5 வழக்குகள் இருந்ததால் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் நடந்து வந்த கண்டிகை பேரி கந்தசாமி மகன் பொன் செல்வன் என்பவரிடமிருந்து தங்கச் செயின் 16 கிராம் மற்றும் மோதிரம் 4 கிராம் ஆகியவற்றைபறித்து சென்ற வழக்கில் ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்த செந்தட்டி காளை என்பவரின் மகன் தேவா என்ற தேவனேசனை சங்கரன்கோவில் டவுண் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து பறித்து சென்ற நகைகளை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே 5 வழக்குகள் இருந்தபடியால் இவரது நடவடிக்கை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சியாளர் கமல் கிஷோர் உத்தரவின் படி ஆய்வாளர் பாலமுருகன் தேவா என்ற தேவனேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைந்தனர். குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

