சாய்பாபாவிற்கு குரு வார ஆரத்தி சிறப்பு பூஜை
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட வேடியப்பன் திட்டு பகுதியில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா திருக்கோவிலில், வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நேற்று வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு குரு வார ஆரத்தி மற்றும் விசேஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவின் அருளைப் பெற்றனர். வழக்கமாக நடைபெறும் ஆறு கால பூஜைகளுடன், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
Next Story




