பாப்பாரப்பட்டியில் கால்நடைகள் விற்பனை மந்தம்

பாப்பாரப்பட்டி வாரச்சந்தையில் புரட்டாசி மாதம் என்பதால் கால்நடைகள் விற்பனை மந்தம்
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை தோறும் கால்நடைகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறுவது வழக்கம் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற இந்த வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகளை விற்க மற்றும் வாங்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர் ஆடுகள் ரூ.1800 முதல் ரூ.16,000 வரைக்கும் மாடுகள் ரகத்தைப் பொறுத்து ரூ.7000 முதல் ரூ.45,000 வரை என 40 லட்சத்திற்கு விற்பனையானது புரட்டாசி மாதம் என்பதால் வர்த்தகம் மந்தமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story