கரூரில் இறந்தவர்களுக்கு தீப சுடர் ஏந்தி அஞ்சலி

X
காங்கேயம் பஸ், நிலையத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் த.வெ.க. கட்சியின் கரூர் தேர்தல் பரப்புரையில் பலியான 41 அப்பாவி பொதுமக்களுக்கு பெரியாரின் பெண்கள் அமைப்புடன் இணைந்து இறந்த வர்களின் படத்திற்கு தீபச்சுடர் ஏந்தி வீரவணக்கம் செலுத் தப்பட்டது. இந்நிகழ்விற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி ஸ்டாலின் தலைமை தாங்கினார். மேலும் பொது மக்கள் 41 பேர் உயிரிழப்பிற்கு காரணமான த.வெ.க. கட் சியின் தலைவர் விஜயை தமிழக அரசு கைது செய்யக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில் புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த கவி, திருமூர்த்தி, சவுந்தரராஜன், செந்தூரன், கண்ணுச் சாமி, பெரியாரின் பெண்கள் ஜென்னி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

