வெள்ளியங்கிரி கோவிலில் காட்டு யானை புகுந்ததால் பக்தர்கள் பீதி – வைரலான வீடியோ!
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள், உணவு தேடி ஒற்றைக் காட்டு யானை புகுந்ததால் பக்தர்கள் பீதி அடைந்து அலறி ஓடினர். அந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்பும் இதே யானை அன்னதான கூடத்தில் புகுந்து உணவு தின்று சேதப்படுத்தியதால், வனத்துறை கும்கி யானையுடன் முகாமிட்டுக் கண்காணித்தது. இதனால் சில மாதங்கள் வராமல் இருந்த யானை, தற்போது மீண்டும் கோவிலுக்குள் நுழைந்துள்ளது. நிரந்தரமாக வனத்துறை முகாமை அமைத்து கும்கி யானைகளை வைத்திருக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாகும்.
Next Story



