கோவை வாடகை வீட்டுத் தகராறு – பெண் பாதுகாப்பு கோரி புகார் !

கோவை வாடகை வீட்டுத் தகராறு – பெண் பாதுகாப்பு கோரி புகார் !
X
முன்னாள் மேயர் கல்பனா உள்ளிட்டோர் மிரட்டல் விடுப்பதாக பெண் பாதுகாப்பு கோரி புகார்.
கோவை கணபதி அருகே மணியகாரபாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் பெண் ராமு (38) மீது, முன்னாள் மேயர் கல்பனா உள்ளிட்டோர் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மாதம் ரூ.4,000 வாடகை செலுத்தி ஏழு வருடங்களாக வசித்து வரும் நிலையில், வீடு காலி செய்யுமாறு அழுத்தம் தந்ததோடு, வீட்டு உரிமையாளரையும் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. "செந்தில் பாலாஜி ஆதரவு உள்ளது; எங்களை எதுவும் செய்ய முடியாது" என மிரட்டியதோடு, ஜாதி பெயர் கூறி திட்டி, மின்சார இணைப்பையும் துண்டித்ததாகவும், மகனை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராமு புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஜாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநகர ஆணையரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story