கணவன் கண்டிப்பு. மனைவி தற்கொலை

X
மதுரை மாவட்டம் பேரையூர் நாகையாபுரம் நடுத்தெருவில் வசிக்கும் சதீஷ்குமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு குரு தேவியை திருமணம் செய்தார் . இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குருதேவி வீட்டிலேயே டெய்லரிங் தொழில் செய்து வந்தார் . இவர் தன் கணவரிடம் குழந்தைகளுடன் கோயம்புத்தூரில் உள்ள தாயார் வீட்டுக்கு விடுமுறைக்கு சென்று வருவதாக கூறினார் . அதற்கு கணவர் இது தீபாவளி நேரம் அடுத்த விடுமுறைக்கு செல்லலாம் என்று கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்த பொழுது குருதேவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை கண்டு நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

