வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த எம் எல் ஏ

மதுரை பாலமேடு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை எம்எல்ஏ தொடக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராஜகல்பட்டி ஊராட்சியில் மறவப்பட்டியிலிருந்து கிருஷ்ணாபுரம் வரை ஒன்றரை கிலோ மீட்டர் 91 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, ராஜாக்கால் பட்டியில் 39.70 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இ சேவை மையம், 99 லட்சத்தில் பாலமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கீழச்சினம்பட்டியில் 90 லட்சத்திற்கு புதிய தார் சாலை மற்றும் 75, லட்சத்தில் பாலமேடு அரசு சுகாதார மருத்துவமனை கட்டுவதற்கான பூமி பூஜையில் நேற்று (அக்.2) எம்எல்ஏ வெங்கடேசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story