டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X
மதுரையில் டாஸ்மார்க் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், காலமுறை ஊதியம், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், நடைமுறையிலுள்ள காலிபாட்டில்களை திரும்பப்பெறுவதற்கு தனியாக ஊழியர்களை நியமிக்கவேண்டும், டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதுவரம்பை 58லிருந்து 60வயதாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் தனசேகர், விசிக மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச.முத்துப்பாண்டியன், மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் ஊர்சேரி சிந்தனை வளவன், மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ரவிக்குமார், மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் தீபம் என்ற சுடர்மொழி, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் காளிமுத்து, மாவட்ட நிர்வாகி உள்ளிட்ட நிர்வாகிகள் . மாநில அமைப்புச் செயலாளர் எள்ளாலன், இளைஞரணி மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள், மதுரை வடக்கு, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சார்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Next Story