கோவை சூலூரில் பள்ளி மாணவர்களின் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்!
கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசூர் ஊராட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் சார்பாக “புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது” என்ற விழிப்புணர்வு நோக்கில் மேரத்தான் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெறுகிறது. இன்று காலை 6 மணிக்கு சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி போட்டியை துவக்கி வைத்தார். அரசூர் உயர்நிலைப்பள்ளி முதல் PSG ITECH வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மேரத்தானில், பள்ளித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர் சங்கத் தலைவர், ஊராட்சி பெரியோர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story



