திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.

திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து.
திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்த முதியவர் மீது வேகமாக வந்த டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா திருக்காம்புலியூர் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வைரப் பெருமாள் வயது 78. இவர் செவ்வாய்க்கிழமை அன்று கரூர்- திருச்சி சாலையில் உள்ள திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப் அருகே காலை 7 மணி அளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் தேனி மாவட்டம் பொம்மைய கவுண்டன்பட்டி பாலன் நகரை சேர்ந்த அஜய்குமார் வயது 18 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நின்று கொண்டிருந்த வைரப் பெருமாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது . இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வைரப் பெருமாளின் மகன் முத்துராஜா வயது 30 என்பவர் அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அஜய்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story