திற்பரப்பு அருவியல் மாணவிக்கு பாலியல் தொல்லை

X
கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் வந்த 17 வயது மாணவியும் அருவியல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் குளித்துக்கொண்டிருந்த மாணவியை திடீரென கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தில் சென்று சுற்றுலா பயணிகளிடம் இருந்து வாலிபரை மீட்டு, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில் வாலிபர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம் (32) என்பது தெரியவந்தது. மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றுவதும் தெரியவந்துள்ளது. பாலியல் தொல்லை சம்பவம் என்பதால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்குமாறு அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

