நீதிமன்ற ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

X
திண்டுக்கல், NGO-காலனி ராமர் காலனியை சேர்ந்த லட்சுமணன் மகன் கார்த்தீபன்(38) இவர் வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக வயிற்று வலியில் அவதிப்பட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்தீபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

