ராசிபுரம் அருகே அனுமதி இன்றி வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்..

X
Rasipuram King 24x7 |3 Oct 2025 7:22 PM ISTராசிபுரம் அருகே அனுமதி இன்றி வீட்டில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் துறையினர் திருவிழாவையொட்டி கள்ளத்தனமாக மதுபான விற்பனை கள்ளச்சாராயம் விற்பனை குறித்த ஆய்வுகளை பல்வேறு இடங்களில் மேற்கொள்ளலாம் அந்த வகையில் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதிகளில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் வீட்டில் சோதனை செய்ததில் அவர் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போதமலை மேலூர் பகுதியைச் சேர்ந்த குப்புசாமி 60 என்பதும் அவர் விவசாயத்திற்காக புதுப்பாளையம் அருகே உள்ள ஆலங்காடு பகுதியில் தங்கியிருப்பதாகவும் கூறினார். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதும் அது உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து ராசிபுரம் காவல் துறையினர் அதனை பறிமுதல் செய்து குப்புசாமியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..
Next Story
