ராசிபுரம் குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..

X
Rasipuram King 24x7 |3 Oct 2025 7:36 PM ISTராசிபுரம் குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றம் முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வழக்குரைஞர்கள் கொண்டாடினர். ராசிபுரம் குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத்தின் 2025-27ம் ஆண்டின் நிர்வாகிகள் தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 29-ல் நடைப்பெற்றது. இதில் தலைவர் பதவிக்கு கே.காமராஜ், செயலர் பொறுப்புக்கு ஆர்.கே.டி.தங்கதுரை, பொருளாளர் பொறுப்புக்கு கமலநாதன் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில், மூவரும் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பாராட்டு விழாவில் நீதிமன்றம் முன்பாக பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். வழக்குரைஞர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
