வாணியம்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலரை பனியிட மாற்றம் செய்ததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.

வாணியம்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலரை பனியிட மாற்றம் செய்ததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
வாணியம்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலரை பனியிட மாற்றம் செய்ததால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம். பட்டா மாறுதலில் முறைகேடு செய்ததால் பணியிட் மாற்றம் செய்ததாக வருவாய் கோட்டாட்சியர் அஜித்தா பேகம் தகவல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சர்குணம். இவருடைய அலுவலகத்தில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது போது கிராம நிர்வாக அலுவலர் சர்குணம் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களில் முறைகேடு செய்துள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆம்பூர் அடுத்த சாதாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணியிடை மாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். பணி மாறுதலை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து காத்திருப்போர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வருகைக்கு பின்னர் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியிட மாறுதலை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். ஆனால் வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் உத்தரவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். அப்போது வருவாய் கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகத்திடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது:- கிராம நிர்வாக அலுவலர் சர்குணம் பட்டா மாறுதல் உள்ளிட்ட சுமார் 40 சான்றிதழ்களை முறைகேடாக வழங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் இன்னும் மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள் இதேபோல் முறைகேடில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தார். பணி மாறுதலை கண்டித்து கிராம நிர்வாக அலுவலருக்கு ஆதரவாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் கிராம நிர்வாக முன்னேற்ற சங்கத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவாய் கோட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
Next Story