கோவில்பட்டி பகுதியில் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை

X
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் இன்றும் காலை முதல் மாலை வரை வழக்கமான வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் மாலையில் பலத்த இடி மின்னல் காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. இந்த பலத்த மழையின் காரணமாக ராபி பருவத்தில் விவசாய பணிகள் மேற்கொண்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Next Story

