மர்மமான முறையில் மூதாட்டி பலி போலீசார் விசாரணை

X
Komarapalayam King 24x7 |3 Oct 2025 8:32 PM ISTகுமாரபாளையத்தில் மர்மமான முறையில் மூதாட்டி பலியானதால், போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியில் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று பிரேதத்தை கைப்பற்றினர். போலீசார் விசாரணையில் இவரது கணவர் முத்துசாமி பல வருடங்கள் முன்பு இறந்து விட்டதாகவும், இவருக்கு ஈரோட்டில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இறந்தவர் பெயர் வனஜா, 70, எனவும், கிடைக்கும் கூலி வேலை செய்து கொண்டு இருப்பதாகவும் தெரியவந்தது. தங்க இடம் இல்லாததால், எதோ காலி இடத்தில் தங்குவது வழக்கம் என தெரியவந்தது. அதுபோல் முதல்நாள் இரவு தூங்கியவர், காலையில் எழுந்திருக்கவில்லை. இது குறித்து வி.,ஏ.ஒ. முருகன் குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
