அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது

X
Komarapalayam King 24x7 |3 Oct 2025 8:34 PM ISTகுமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் உள்பட போலீசார் பலரும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இடைப்பாடி சாலை உழவர் சந்தை அருகே , அதிக விலைக்கு மது விற்றுக்கொண்டு இருந்தார். நேரில் சென்ற போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணையில் அவர் கூலித்தொழிலாளி தன்ராஜ், 29, என்பது தெரியவந்தது.
Next Story
