வருவாய்த்துறை சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருமணி வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடந்தது. இதில் வருவாய்த்துறை சங்கங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைவேல் தலைமை வகித்தார். இதில் பழைய ஓய்வூதிய திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பணி நிறைவு செய்ய கால அவகாசம் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story





