கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் !

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் !
X
காலி பாட்டில்கள் வாங்குதல், ஸ்டிக்கர் ஒட்டுதல் காரணமாக பணிச்சுமை அதிகரிப்பு என கூறி ஆர்பாட்டம்.
கோவை பீளமேடு, விளாங்குறிச்சி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் தொழில் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்து இருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுபான பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல், காலி பாட்டில்களை திரும்பப் பெறுதல் போன்ற கூடுதல் பணிகள் ஊழியர்களின் சுமையை அதிகரிப்பதாகவும், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், பாட்டில் திரும்பப் பெற தனி பணியாளர்கள் நியமிக்க வேண்டும், ஸ்டிக்கர் ஒட்டும் பொறுப்பு நிர்வாகமே ஏற்க வேண்டும் என வலியுறுத்தினர். தி.மு.க தேர்தல் வாக்குறுதி 159-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் அது நிறைவேற்றப்படவில்லை எனவும் போராட்டத்தில் தெரிவித்தனர்.
Next Story