மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்.
மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கல்யாண வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம். தமிழகத்தின் தென் திருப்பதி என அழைக்கப்படும் கரூர் தாந்தோணி மலை வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் இன்று புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் நலன் கருதியும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆயினும் கோவிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.காவல்துறையினர் பக்தர்களை வரிசையில் செல்லுமாறு அறிவுறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களும் நீண்ட நேரம் வரிசையில் சென்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story





