ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் அழியாநிலை ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அக்டோபர் 4 புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பிரதோஷ வழிபாடு விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்றது. இதில் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story



