பசுபதிபாளையம் மதுவினால் ஏற்பட்ட வயிற்று வலி- வாலிபர் விரக்தியில் தற்கொலை.

பசுபதிபாளையம் மதுவினால் ஏற்பட்ட வயிற்று வலி- வாலிபர் விரக்தியில் தற்கொலை.
பசுபதிபாளையம் மதுவினால் ஏற்பட்ட வயிற்று வலி- வாலிபர் விரக்தியில் தற்கொலை. கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர்பாண்டியன் வயது 28. இவருக்கு அண்மைக்காலமாகவே மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக வயிற்று வலியால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த பாண்டியன் வியாழக்கிழமை மாலை 7 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அறிந்த பாண்டியனின் மனைவி சரண்யா வயது 25 என்பவர் அளித்த புகாரில் பசுபதிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
Next Story