கீழ சிந்தலவாடி-திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட குடும்ப தகராறு- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.
கீழ சிந்தலவாடி-திருமணம் முடிந்து நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட குடும்ப தகராறு- வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை அருகே கீழ சிந்தலவாடி பகுதியைச் சேர்ந்தவர் பாபு வயது 35. இவருக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் இவரது மனைவி கடந்த 7- மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். இதனால் விரக்தியில் வாழ்ந்து வந்த பாபு வியாழக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த பாபுவின் தாயார் சாந்தி வயது 65 என்பவர் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர் .
Next Story




