ஈசநத்தம் பிரிவு-டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.

ஈசநத்தம் பிரிவு-டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து.
ஈசநத்தம் பிரிவு-டூவீலர்-கார் நேருக்கு நேர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி ஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது முபாரக் வயது 40. இவர் வெள்ளிக்கிழமை மதியம் 1:15 மணி அளவில் கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். இவரது வாகனம் ஈசநத்தம் பிரிவு அருகே சென்றபோது எதிர் திசையில் கரூர் வெள்ளாளப்பட்டி வடக்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் வயது 50 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் முகமது முபாரக் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த முகமது முபாரக்-ஐ உடனடியாக மீட்டு அரவக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த முகமது முபாரக்கின் சகோதரர் முகமது சித்தீக் வயது 29 என்பவர் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் செந்தில்குமார் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story