ஜெகதாபி அருகே டூ வீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி முதியவர் படுகாயம்.

ஜெகதாபி அருகே டூ வீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி முதியவர் படுகாயம்.
ஜெகதாபி அருகே டூ வீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை வெங்கடேஸ்வரா நகர் 3வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் ராஜ் வயது 66. இவர் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கரூர் - மணப்பாறை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ஜெகதாபி அருகே இலந்தக்கோட்டை பிரிவு அருகே சென்றபோது எதிர் திசையில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்களம்பூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் ராஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக டேவிட் ராஜ் அளித்த புகாரில் விபத்து ஏற்படும் வகையில் சரக்கு வாகனத்தை ஓட்டிய வீரமணி மீது வெள்ளியணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story