முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

X
கோவில்பட்டியில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளை தமிழக சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அவர் பேசும்போது, “முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கோவில்பட்டியில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். ஹாக்கியில் சிறந்து விளங்கும் கோவில்பட்டியை ‘ஹாக்கிபட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தேசிய அளவிலான வீரர்கள் உருவாகி வருகின்றனர்,” என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், நகரமன்ற தலைவர் கருணாநிதி, விளையாட்டு ஆணையர் எம்.ராஜா, மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோனி அதிஷ்டராஜ், விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

