புரட்டாசி மாத சனி பிரதோஷம் சிவன் கோயில் வழிபாடு

சிவபெருமானுக்கு உகந்த தினமான பிரதோஷ தினம் அன்று சிவாலயம் சென்று வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆனால் அதே பிரதோஷம் சனிக்கிழமை வரும்போது சனி பிரதோஷம் வெகு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது அன்று ஆலயம் சென்று வழிபட்டால் சிவனை ஒரு ஆண்டு வழிபட்டதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் புரட்டாசி மாத சனி பிரதோஷம் ஆன இன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பால் தயிர் இளநீர் விபூதி மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதைத்தொடர்ந்து சங்கர ராமேஸ்வரர் மற்றும் நந்தி பகவான் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது மேலும் சுவாமி மற்றும் அம்பாள் மேஷ வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர் இதில் கலந்துகொண்ட பக்தர்கள் சிவாய நமக ஓம் நமச்சிவாய நமக என பக்தி கோஷங்களை எழுப்பிய படி சென்றனர்
Next Story

