திருச்செங்கோட்டில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின்பிரச்சாரப் பயணம் ரத்து
Tiruchengode King 24x7 |4 Oct 2025 5:44 PM ISTதிருச்செங்கோட்டில் நாளை ஐந்தாம் தேதி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடக்க இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரப் பயண நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மாற்று இடம் தேர்வு சீரமைக்க காலதாமதம் ஏற்படுவதால் பிரச்சாரப்பயணம் 2 முறையாக மீண்டும் ரத்து
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணம் நாளை 5ம் தேதி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதனை ஒட்டி திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று அழைத்து வரவும் அண்ணா சிலை அருகில் அவர் பிரச்சன வாகனத்தில் இருந்து பேச ஏற்பாடும் செய்யப்பட்டு ரவுண்டானாவில் இருந்து அண்ணா சிலை வரை ஃபோக்கஸ் லைட்டுகள் அமைக்கப்பட்டு அண்ணா சிலை அருகே அவரது பிரச்சார வாகனம் நிற்கும் இடத்தில் அதிக ஒளி வெல்லம் தெரியும் வகையில் சுமார் 40 ஃபோக்கஸ் லைட்டுகள் ஒரே வரிசையாக அமைக்கப்பட்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமியின் உருவங்கள் மின்விளக்குகளால் ஒளிரும்படியும் வைக்கப்பட்டு இருந்தது திருச்செங்கோடு பயணம் முடிந்து கூட்டப்பள்ளி தோக்கவாடி எஸ்பிபி காலனி வழியாகஎப்படி பழனிச்சாமி குமாரபாளையம் செல்லும் வழி நெடுகிலும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு விளம்பர பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணா சிலை அருகில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என காவல்துறை மறுத்திருப்பதாக தெரிகிறது ஏற்கனவே ஒரு முறை எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார பயண கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றைய கூட்டத்தை எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்பதற்காக தனியார்பட்டா நிலங்களில்தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலைகள் இல்லாத பகுதிகளில் பிரச்சாரப் பயணத்தை நடத்தி விடுவது என தீர்மானித்து நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி தீவிர இடம் தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.இதுவரை இரண்டு முறை விளக்குகள் அமைக்கும் பணி கொடிகள் நடும் பணி பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டது என பணிகள் நடைபெற்ற இன்றைய இடமாற்றத்தின் காரணமாக மீண்டும் வேறு இடத்துக்கு அவற்றை மாற்ற வேண்டிய நிலையில் அதிமுகவினர் உள்ளனர்.இடம் தேர்வு செய்யப்பட்டு காவல்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டு கூட்டம் நடத்தப்படுமா அல்லது இந்த முறையும் கூட்டம் ரத்தாகுமா? என அதிமுகவினர் கலக்கத்தில் உள்ளனர்.இந்த நிலையில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை சீரமைத்து பொதுக் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்ய காலதாமதம் ஏற்படும் என்பதால் இரண்டாவது முறையாக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார பயணம் ரத்து செய்யப்பட்டது தேதி மீண்டும் பின்னர் அறிவிக்கப்படும் என அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்
Next Story



