விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் மாவட்ட காவல்துறை அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்: கே எஸ் அழகிரி பேட்டி.

X
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்கு பதிவு செய்தால் மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் மாவட்ட காவல்துறை அதிகாரி மீதும் வழக்கு பதிவுசெய்ய வேண்டும் அரசியல் தலைவரை பார்க்க சென்றால் தன்னடக்கத்துடன் மக்கள் போகணும் கரூர் சம்பவத்தில் எந்த விதமான சதியும் கிடையாது பின்னனியும் கிடையாது என கே எஸ் அழகிரி பேட்டி
அரியலூர், அக்.4- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வாக்குத்திருட்டிற்கு காரணமான பாஜக மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்க பிரச்சாரம் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே எஸ் அழகிரி கலந்துகொண்டு கையெழுத்து இயக்க பதாகையில் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்க பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் இதனையடுத்து மாவட்ட தலைவர் சங்கர் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்து பதாகையில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கையெழுத்திட்டனர். பின்ன செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி கரூரில் நடந்த சம்பவம் பற்றி பல அரசியல் கட்சிகளும் வருத்தத்தை தெரிவித்துள்ளனர் இந்த துயரமான விஷயம் குறித்து ராகுல் காந்தி உடனடியாக தன்னுடைய வருத்தத்தை தெரிவித்திருக்கிறார் தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார் முதலமைச்சரிடமும் பேசியிருக்கிறார் விஜய் அவர்களிடம் பேசி என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார் இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷனை முதலமைச்சர் நியமித்திருக்கிற காரணத்தினால இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதை பார்த்துக் கொண்டு அதன் பிறகு நம்முடைய கருத்துக்களை முழுமையாக சொல்லலாம் என்று காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்திருக்கிறது என கூறினார் என்னுடைய மன ஓட்டம் என்பது என்னன்னா அதுல எந்த விதமான சதியும் கிடையாது பின்னனியும் கிடையாது அளவுக்கு அதிகமான கூட்டம் ஆர்வம் உள்ள ஒரு கூட்டம் ஒருவரை ஒருவர் தள்ளி கொண்டு ஒருவரை ஒருவர் மிதித்ததால் ஏற்பட்டதுதான் அந்த இறப்பு. இதில் போலீஸ் சரியில்ல அல்லது நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்வது அரசியல் ஆதாயத்திற்காக சொல்வது. அனுபவம் இல்லாத காரணத்தினால் மக்கள் திரளை கட்டுப்படுத்துவதற்கான வழி தெரியாத காரணத்தினால் இது ஏற்பட்டிருக்கிறது புதிய கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்களுக்கு அது புரியல அதுவும் கூட அந்த சிரமங்களுக்கு ஒரு காரணம் எப்படி இருந்தாலும் 41 பேருடைய உயிரிழப்பு என்பது மிகப்பெரிய இழப்பு. இதுபோன்று வருங்காலங்களில் ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய யாரையும் யாரும் அரசியல் ரீதியாக பழிவாங்குவதற்கோ அல்லது ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதற்கோ ஏற்ற தருணம் இது அல்ல எனக் கூறினார். அரசியல் தலைவரை பார்க்க சென்றால் தன்னடக்கத்துடன் நாம போகணும் அவர் சொல்ற கருத்துக்களை கேட்கணும் அமைதியா அதை சிந்திக்கணும் இது சரியா தவறா என்று பார்க்க வேண்டும் அந்த மனபக்குவத்தை நாம் தெரிந்து கொண்டால் தான் தமிழ் சமுதாயம் நாகரீகமான சமுதாயம் என்கின்ற பெயர் வெளியில வரும். வருங்கால தமிழ் சமுதாயம் இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா என செய்தியாளர்களின் கேள்விக்கு விஜய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் மாவட்ட ஆட்சித் தலைவர் மீதும் மாவட்ட காவல்துறை அதிகாரி மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஓரிடத்திற்கு எவ்வாறு அனுமதி கொடுத்தனர் விஜய்க்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று அவர்களுக்கு தெரியும் அதற்கு ஏற்றவாறு அனுமதி வழங்க வேண்டும் அல்லது நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கி வர வேண்டும் என தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த கேள்விக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பால் மக்களுக்கு நன்மை உண்டு ஜிஎஸ்டி வரி குறைப்பை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான் முதன் முதலில் வரி குறைப்பை கொண்டு வந்ததற்கு அடிப்படை காரணமே மன்மோகன் சிங்க் தான் என தெரிவித்தார்.
Next Story

