பைக் மீது கார் மோதியதில் இளைஞர் படுகாயம்

X
பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் மணிராஜ் (22). இவர் நேற்று முன்தினம் அவரது இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் மணிராஜ் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து பெரியகுளம் காவல் துறையினர் வழக்கு (அக்.3) பதிவு.
Next Story

