திருச்செங்கோடு மேற்கு நகர இளைஞர் அணி சார்பாக பயிற்சி பாசறை கூட்டம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர்ஜோயல், சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர் மதன் கலந்துகொண்டனர்
Tiruchengode King 24x7 |4 Oct 2025 8:17 PM IST2026 தேர்தலில் திமுக இளைஞர் அணியினர் ஆற்ற வேண்டிய பணி குறித்து திருச்செங்கோடு மேற்கு நகர இளைஞர் அணியினருக்கு பயிற்சி அளிக்கும் பாசறை கூட்டம் நடைபெற்றது மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞரணிஅமைப்பாளர் ஆர் டி மதன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்
நாமக்கல் மேற்கு மாவட்ட திருச்செங்கோடு மேற்கு நகர இளைஞர் அணி சார்பாக பயிற்சி பாசறை கூட்டம்திருச்செங்கோடு மேற்கு நகர பொறுப்பாளர் நடேசன் அலுவலகத்தில் நடைபெற்றது நகர இளைஞர் அணி அமைப்பாளர் கு.செங்கோட்டுவேல் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பாலாஜி முன்னிலைவகித்தார் மேற்கு நகர பொறுப்பாளர்ஆர்_நடேசன் தலைமைவகித்தார் கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அண்ணன் ஜோயல், சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.டி.மதன், ஆகியோர் கலந்து கொண்டு வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை வீடு வீடாக எடுத்துச் சென்றுபுரியும்படி எடுத்துக்கூறி வெற்றியைத் தேடித் தருவது எப்படி என்பது குறித்து விளக்கி கூறினார்கள்.கூட்டத்தில்மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ் நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கார்த்தி மற்றும் பாலாஜி, வார்டு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி பொறுப்பாளர்கள்என பலரும் கலந்து கொண்டனர்
Next Story



