ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ விழா...

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ விழா...
X
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷ விழா...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் சனி பிரதோஷ விழாவை முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீ நந்தி பகவான் சுவாமிக்கு முக்கிய அபிஷேகங்கள் ஆன பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் வெள்ளிகாப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது‌. மேலும் ஸ்ரீ சனி பகவான் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோயில் அர்ச்சகர்கள் சிவ ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ ஸ்ரீ மது தில்லைநாத சிவாச்சாரியார் ஆகியோர் கோவில் பூஜையை சிறப்பாக செய்து இருந்தனர்...
Next Story