ராசிபுரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை...

ராசிபுரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை...
X
ராசிபுரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மூன்றாவது வார சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோயில் அர்ச்சகர் பாபு அவர்கள் ஏற்பாட்டில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயரை தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story