டூவீலரில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலி

X
Komarapalayam King 24x7 |4 Oct 2025 9:04 PM ISTகுமாரபாளையம் அருகே பெண் ஒருவர் குறுக்கே நடந்து சென்றதால், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் டூவீலரில் சென்றவர் பலியானார்.
குமாரபாளையம் அருகே எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன், 42. இவர் செப். 22ல் ,மாலை 04:30 மணியளவில், தன் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர, தனது டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி வாகனத்தில் பள்ளிபாளையம் சாலை, சானார்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண் ஒருவர் குறுக்கே நடந்து சென்றதால் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். தலையில் காயடைந்த இவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
