சிறுவர், சிறுமியர் பூங்கா அமைக்க கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |4 Oct 2025 9:35 PM ISTகுமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் சிறுவர், சிறுமியர் பூங்கா அமைக்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் பழைய சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இது மிகவும் சேதமான நிலையில் உள்ளதால், செடி, கொடிகள் வளர்ந்து, சுவற்றை துளைத்து கொண்டுள்ளது. இதனால் கட்டிடம் மேலும் சேதமாகும் நிலை உள்ளது. இதனால் தேள். பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு, அச்சத்தில் இருந்து வருகின்றனர். உடனே அந்த செடிகொடிகளை வெட்டி விட்டு ஆசிட் ஊற்ற வேண்டும்.மேலும் இதன் அருகில் உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகமாகி, பல்வேறு நோய்கள் பரவ காரணம் ஆகின்றது. அந்த இடத்தை தூய்மை படுத்தி, அங்கு, அப்பகுதி சிறுவர், சிறுமியர் விளையாட, பொழுது போக்கு பூங்கா அமைத்து தர வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அப்பகுதி சிறுவர், சிறுமியர்கள் நகராட்சி அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.
Next Story
