தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா

X
Komarapalayam King 24x7 |4 Oct 2025 9:48 PM ISTகுமாரபாளையம் நடராஜா நகர் பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது
. குமாரபாளையம் நடராஜா நகர் பகுதியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக கொண்டாடப்பட்டது. அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. தியாகி சுப்பிரமணிய சிவா மற்றும் திருப்பூர் குமரன் அவர்கள் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு பஞ்சாலை சண்முகம் எடுத்துரைத்தார். மாணவ மாணவிகளுக்கு 64 வது வாசிப்பு மையம் தொடங்கப்பட்டு, மையத்தை ஜமுனா, கோமதி, ஆகியோர் மேற்பார்வையில் மையம் நடைபெறும். தீனா நன்றி உரையாற்றினார். பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story
