கோட்டை பெருமாள் கோவில் கண்ணாடி அறை சேவை

தர்மபுரி கோட்டை ஸ்ரீ வராமஹாலக்ஷ்மி பரவாசுதேவ பெருமாள் திருக்கோவிலில் கண்ணாடி அறை சேவை நடைபெற்றது
தர்மபுரி ஸ்ரீ வராமஹாலக்ஷ்மி பரவாசுதேவ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இரவு கண்ணாடி அறை சேவை நடைபெற்றது இதில் ஸ்ரீதேவி பூதேவி சமீத பரவாசுதேவர் பெருமாள். பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கண்ணாடி அறை சுற்றிலும் தசாவதாரங்கள் உள்ளது இதில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கண்ணாடி அறை உற்சவம் நடைபெறும் பெருமாளை வழிபட்டனர். தசாவதாரம் 10 அவதாரங்கள் படங்கள் அமைக்கப்பட்டு பெருமாள் அலங்கரித்து கண்ணாடி அறைக்குள் வைத்து சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று புரட்டாசி 3வது சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணாடி அரை உற்சவம் பெருமாளை தரிசனம் பெற்றனர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்..
Next Story