நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி சிற்றாலய பிரதிஷ்டை விழா

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி சிற்றாலய பிரதிஷ்டை விழா
X
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி சிற்றாலய பிரதிஷ்டை விழா
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தின் 34-வது பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது . விழா ஆரம்பமாக கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடினர். திருச்செந்தூர் சேகர தலைவர் ஆல்வின் ரஞ்சித்குமார் பிரதிஷ்டை ஆராதனையை நடத்தினார். பிள்ளையன்மனை சேகர தலைவர் ஆல்பர்ட் டேனியல் மற்றும் குருவானவர் வனிதாராணி ஆகியோர் திருவிருந்து ஆராதனையை நடத்தினர்.  சிறப்பு அழைப்பாளராக கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் வெல்ற்றன் ஜோசப் கலந்து கொண்டு தேவ செய்தி வழங்கினார். பின்னர் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் கல்லூரி செயலர் பிரேம்குமார் ராஜாசிங் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நட்டினார். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story