நாசரேத்தில் ஆசிரியர் வீட்டில் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை

X
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் ஐ.எம்.எஸ். நகர் பகுதியில் தொழிற்கல்வி ஆசிரியர் சித்தர் ராஜா டேவிட் சாமுவேலின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சித்தர் ராஜா டேவிட் சாமுவேலும், அவரது மனைவியும் சென்னையில் மகள் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்க கம்மல் மற்றும் ரூ.5,000 பணம் திருடப்பட்டதாக தெரியவந்தது. பக்கத்து வீட்டு கதவையும் உடைத்து சென்றிருந்தாலும் எதையும் எடுக்காமல் சென்றது தெரியவந்தது. நாசரேத் போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து, முகமூடி அணிந்த நபரை அடையாளம் காண தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

